தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி - govt photo exibition in krishnakiri

கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

EXHIBITION  புகைப்படக் கண்காட்சி  govt photo exibition in krishnakiri
புகைப்பட கண்காட்சி

By

Published : Feb 1, 2020, 9:59 AM IST

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று அமைக்கப்பட்டிருந்தது.

இதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்த அரசுத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது, குடிமராமத்துப் பணிகள் மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

புகைப்படக் கண்காட்சி

தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும்விதமாக இக்கண்காட்சி அமைந்திருந்தது. இக்கண்காட்சியை 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

ABOUT THE AUTHOR

...view details