கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட் ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன் பல இடங்களில் வளர்க்கப்பட்டுவருகிறது. இம்மீனை பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக தோல் வியாதிகள், தோல் அரிப்பு, வாந்தி பேதி போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.
ஆனால், விலை குறைவு என்னும் காரணத்தினால் பொதுமக்கள் அதிகம் வாங்கி சாப்பிடுவதால் கள்ளச்சந்தையில் மீன்களை விற்பதற்காக பல இடங்களில் குட்டை கட்டி மீன்களை வளர்த்து வந்தனர். இதனைக் கண்டுபிடித்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் கவனத்திற்குக் கொண்டு சென்றது. இதையடுத்து அவர் அளித்த உத்தரவின்பேரில், வருவாய் துறையினரும் மீன்வளத் துறையினரும் இணைந்து ஓசூர் அருகே குட்டைகளில் வளர்க்கப்பட்டு வந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.