தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலு பொம்மைகள் உற்பத்தி பாதிப்பு! - கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: கொலு பொம்மைகள் உற்பத்தி செய்ய களிமண் எடுப்பதற்கு அரசு விதித்த கெடுபிடியால், நவராத்திரி விழாவிற்கான கொலு பொம்மை உற்பத்தி 40 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

Golu Statues

By

Published : Sep 28, 2019, 8:29 PM IST

இதுதொடர்பாக விற்பனையாளர்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் கடலூர், காஞ்சிபுரம், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகளவில் கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொலு பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில், போதிய வருவாய் இன்றி தற்போது சிலர் மட்டுமே பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு 80 விழுக்காடும், மீதியுள்ளவை உள்ளூர் விற்பனைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்ரன. 40 பொம்மைகள் உள்ள ஒரு செட், ரூ.250 முதல் ரூ.8 ஆயிரம் வரையும், தனிபொம்மைகள் ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலுபொம்மைகள் உற்பத்தி பாதிப்பு !

இந்த ஆண்டு களிமண் எடுக்க கெடுபிடியால் 60 விழுக்காடு பொம்மைகள் களிமண்ணால் செய்துள்ளோம். 40 விழுக்காடு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டர்கள் உரிய நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரி, காஞ்சிபுரம் பகுதியில் இருந்து 40 விழுக்காடு பொம்மைகள் வாங்கிவரப்படுகின்றன. மேலும், மூலபொருட்கள் விலை உயர்வு, தயாரிப்பு செலவு உள்ளிட்டவை அதிகரிப்பால், கொலு பொம்மைகளின் விலை சற்று அதிகரித்துள்ளது என்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details