கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள மலை கிராமத்தில், குட்டையில் விழுந்த காட்டெருமை ஒன்று சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வனவர் சுகுமார் தலைமையிலான வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
குட்டையில் சிக்கிய காட்டெருமையை மீட்ட வனத் துறை! - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி: தேன்கனிகோட்டை அருகே குட்டையில் விழுந்து காட்டெருமையை வனத் துறையினர் பல மணி நேரம் போராடி மீட்டனர்.
![குட்டையில் சிக்கிய காட்டெருமையை மீட்ட வனத் துறை! குட்டையில் சிக்கிய காட்டெருமையை மீட்ட வனத் துறை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7195778-thumbnail-3x2-gaur.jpg)
குட்டையில் சிக்கிய காட்டெருமையை மீட்ட வனத் துறை
பின்னர், கயிற்றின் மூலம் காட்டெருமையை இழுத்து காப்பாற்றும் முறையை கையாண்டனர். ஆனால், அது தோல்வியடைந்தது. இதையடுத்து குட்டையின் ஒரு பகுதியை சமம் செய்து, அந்தக் காட்டெருமையை குட்டையிலிருந்து வெளியே வர ஏற்பாடு செய்தனர். பல மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு, குட்டையில் சிக்கத் தவித்த காட்டெருமை வெளியே வந்து வனத்துக்குள் சென்றது.
இதையும் படிங்க: உடும்புக் கறி சாப்பிட்டவர்களை மடக்கிப் பிடித்த வனத் துறை!