கிருஷ்ணகிரியில் வனப்பகுதி நிறைந்து காணப்படுவதால் காட்டு விலங்குகள் உணவுக்காகவும், தண்ணீரைத் தேடியும் அடிக்கடி கிராமத்துக்குள் வருவது வழக்கம். அவ்வாறு வந்தால் அவற்றை விரட்டுவதும் மக்களுக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்து வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே மாதேபட்டி கிராமத்தில் முனுசாமி என்பவரின் விவசாய நிலத்தில் காட்டெருமை ஒன்று புகுந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் காட்டெருமையை விரட்ட முயற்சித்தனர். அப்போது ஒருவரை, காட்டெருமை தூக்கி வீச சிறிது நேரம் அவர் ஃபிளையிங்-இல் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.