தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியிலிருந்து ஜார்கண்ட் புறப்பட்ட 1616 தொழிலாளர்கள் - krishnagiri migrant workers

கிருஷ்ணகிரி: வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 616 பேரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் சொந்த ஊருக்கு சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைத்தார்.

from krinshnagiri 1616 migrant workers depatured to jharkhand
கிருஷ்ணகிரியிலிருந்து ஜார்க்காண்டிற்கு புறப்பட்ட 1616 தொழிலாளர்கள்

By

Published : May 24, 2020, 12:56 PM IST

கிருஷ்ணகிரி வட்டத்தில் 128 நபர்களும், பர்கூர் வட்டத்தில் 21 நபர்களும், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் 383 நபர்களும், ஓசூர் வட்டத்தில் 1004 நபர்களும் சூளகிரி வட்டத்தில் 77 பேரும் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3 பேர் என மொத்தம் ஆயிரத்து 616 நபர்கள் ஓசூர் ரயில் நிலையத்திலிருந்து பொக்கோரோ ஸ்டீல் சிட்டி சிறப்பு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்

ஒரு நபருக்கு பயண சீட்டு தலா ரூ.795 வீதம் ஆயிரத்து 616 நபர்களுக்கு ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 720 மதிப்பில் பயண சீட்டு தொகையை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் அளித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உணவு வழங்கல்

முன்னதாக பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. வெளிமாநிலப் பயணிகளுக்கு ரயில் பயணத்தின்போது அவர்களுக்கு உண்ண உணவாக பிஸ்கெட், சப்பாத்தி, புளிசாதம், குஸ்கா, ஆரஞ்சு பழம், வாழைப்பழம், மாம்பழம், குடிநீர் பாட்டில், உள்ளிட்ட பொருள்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details