கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரையடுத்த பாகலூர் அருகே அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் மொத்தம் 234 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் - அரசுப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே 234 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
![கிருஷ்ணகிரியில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் krishnagiri](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6073640-thumbnail-3x2-l.jpg)
krishnagiri
விழாவில் ஆசிரியர்கள் கிராமப் புறங்களில் போக்குவரத்து வசதியற்ற மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கவும், இடைநிற்றலை தடுக்கவும் அரசு இலவச மிதிவண்டி திட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். விழாவில் ஒசூர் ஒன்றிய குழுத்தலைவர் சசி வெங்கடசாமி, பெற்றோர் கழக ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கினர்.
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
இதையும் படிங்க:2,868 விலையில்லா மிதிவண்டிகள்; அமைச்சர் சி.சீனிவாசன் தொடங்கி வைப்பு