கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள ஊடேதுர்கம் வனப் பகுதியில் முகாமிட்டுள்ளன.
காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை! - பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்கம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பாதுக்காப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Foresters warn public as wild elephants camp
இதையடுத்து, கவிபுரம், யூ புரம், நாகமங்கலம், உப்பு பள்ளம் உள்ளிட்ட கிராம மக்கள் ஆடு மாடு மேய்க்க வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம்; பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று ஓசூர் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.