கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பலரும் தங்களது வேலை வாய்ப்பினை இழந்து வீடுகளிலேயே அடைந்து கிடக்கின்றனர்.
மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, பூவினை பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிருஷ்ணகிரி விவசாயிகள், தங்கள் மாவட்டம், அதன் சுற்றுவட்டாரங்களில் பலரும் மல்லிகை பயிரிட்டுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினமும் செடிகளிலிருந்து பூ பறிக்க ஆட்கள் கிடைக்காமலும், பறித்த பூவினை மக்களிடையே விற்பனை செய்ய முடியாமலும் தவித்துவருவதாக தெரிவித்தனர்.