கிருஷ்ணகிரி:ஒசூர் அடுத்த மாலூர் சாலையில், ஆட்டோவும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவர்கள் பாகலூரைச் சேர்ந்த அபீத் (21), சையப் (20), தருமபுரியைச் சேர்ந்த பூவரசன் (19) எனத் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.