தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழந்த வழக்கு: 9 பேர் விடுதலை!

கிருஷ்ணகிரி அருகே 20 ஆண்டுகளுக்கு முன், திமுக பொதுக்கூட்டத்தில் பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

9 பேர் விடுதலை!
9 பேர் விடுதலை!

By

Published : Feb 10, 2023, 4:16 PM IST

கிருஷ்ணகிரி:ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கடந்த 2003-ம் ஆண்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், அப்போதைய மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பட்டாசு வெடித்த போது, தஸ்தகீர் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் நவாப் உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று (பிப்.10) தீர்ப்பளித்தது.

நீதிபதி தனது தீர்ப்பில், "குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அரசு தரப்பில் ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே வழக்கில் இருந்து 10 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டார். விசாரணையின் போதே ஒருவர் உயிரிழந்ததால், 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவனை கடத்தி தாக்கிய வழக்கு: 9 மாணவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details