கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (42). இவர் தனது 12 வயது மகன் கிருபாவிற்கு விவசாயக் கிணற்றில் நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.
கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி! - Father died in krishnagiri
கிருஷ்ணகிரி: வேலம்பட்டி பகுதியில் கிணற்றில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மகன்
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அத்தகவின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் குதித்து தந்தை, மகன் இருவரையும் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து நாகரசம்பட்டி காவல் நிலையல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.