ஓசூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான குற்றப்பிரிவு காவல் துறையினர், நவம்பர் 9ஆம் தேதி தளி ரயில்வே கேட் சந்திப்புப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பல்சர் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி காவல் துறையினர் விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்ததால், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், சந்தஹள்ளி அருகே உள்ள திருமலட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மா என்ற ராஜு (23) அவரது தந்தை பிரகாஷ் (48) என்பதும் தற்போது பேரிகை அடுத்த சொன்னேபுரம் கிராமத்தில் பிரகாசும் ஓசூர் வாசவி நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் தர்மாவும் வசித்துவருவதும் தெரியவந்தது.