தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரட் விளைச்சலால் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வருவாய்: விவசாயிகள் மகிழ்ச்சி - கேரட் விளைச்சல்

கேரட் விளைச்சலில் ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரட் விளைச்சலால் மூன்று லட்சம்! விவசாயிகள் மகிழ்ச்சி
கேரட் விளைச்சலால் மூன்று லட்சம்! விவசாயிகள் மகிழ்ச்சி

By

Published : Jan 30, 2020, 3:55 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நல்ல மண்வளமும், குளிர்ந்த சூழ்நிலையும் நிலவுவதால் பழ வகைகள், கீரை வகைகள், மலர், காய்கறி உள்ளிட்டவைகள் வேளாண்மை செய்யப்பட்டுவருகின்றனர். அப்பகுதிகளில் விளையும் பொருள்கள் தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன.

ஓசூர் பகுதிகளில் தற்போது குளிர்காலம் நிலவுவதால் கேரட் அமோக விளைச்சலாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கேரட் பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்திட ஒரு லட்சம் ரூபாய் வரை விவசாயிகள் செலவிட்டுள்ளனர்.

கேரட் விளைச்சலால் மூன்று லட்சம்: விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் ஒரு ஏக்கரில் 15 டன்னுக்கும் அதிகமாக கேரட் விளைச்சல் இருப்பதால், அண்டை மாநில வியாபாரிகள் நேரடியாகத் தோட்டங்களிலேயே கேரட் கிலோ 25 ரூபாய்க்கு பெற்றுச் செல்வதாகவும், இதனால் ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய்வரை வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஓசூரில் கொடுத்த பணம் கேட்கச் சென்றவருக்கு அரிவாள் வெட்டு!

ABOUT THE AUTHOR

...view details