ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஸ்ரீராமரெட்டி தலைமையிலான விவசாயிகள், புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், 'ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை நில அளவையாளராகப் பணியாற்றி வரும் ராஜா என்பவர், விவசாயிகளின் பட்டா மாற்றம், பெயர் மாற்றம், நில அளவை செய்வதற்கு லஞ்சம் கேட்டு வருகிறார்.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லஞ்சம் கேட்பதால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தைப் பணி முடிந்தவுடன் தருவதாகக் கூறி வழங்கி விட்டுச் செல்லும் மக்களிடம், மீண்டும் சென்று கேட்டால் பணமே தரவில்லை என்கிறார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா மாற்றம், நில அளவு உள்ளிட்டப் பணிகளை செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறார். மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் ஓசூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.