கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
ஏற்கனவே கடந்த 31ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,பெறப்பட்ட 190 மனுக்களில்,165 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள ஆறு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏரிகள், பேருந்து வசதி, குடிநீர் வசதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை வசதி, அடங்கல், வன விலங்கு பிரச்சனை, கடன் வசதி, மின் இணைப்பு, கூட்டுறவு பயிர்கடன், பால் கொள்முதல், 33- ஏரிகளுக்கு பாசன வசதி, கால்நடை மருந்தகம், நிலஅளவை, பவர் கீரீட், கோழிபண்ணை துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம், விவசாயிகள் தெரிவித்தனர்.