ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன் குமார் வாக்கு சேகரித்தார்.
’மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்’ - பொன்குமார் நம்பிக்கை!
கிருஷ்ணகிரி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலில் மதச்சார்பின்மையை பாதுகாப்பதை விட ஜனநாயகத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தாயை கூடுவதற்கு சமம் என்று கூறிய ராமதாஸ் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ள முடிவு அவருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிலுள்ள இரண்டரை கோடி வன்னியர்கள் மீதும் விழுந்த நீக்க முடியாத கறை என்று சாடினார்.