கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முகக்கவசம், கை சுத்திகரிப்பு கிருமி நாசினி ஆகியவை தயாரிக்கப்பட்டது. அதன் விற்பனையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்பு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கிருஷ்ணகிரி தாளாப்பள்ளி ஊராட்சி காமராஜ் நகர் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் முகக்கவசம், கை சுத்திகரிப்பு கிருமி நாசினி ஆகியவை மகளிர் சுய உதவிக்குழுகள் மூலம் தயாரிக்கப்பட்டு, குறைந்த விலைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.