தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி! - பேருந்து நிலையத்தில் புகைப்பட கண்காட்சி

கிருஷ்ணகிரி: புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் துறை ரீதியான சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் திரளானோர் கண்டுகளித்தனர்.

exhibition

By

Published : Oct 23, 2019, 2:01 PM IST

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் துறை ரீதியான அரசின் மக்களுக்கான திட்டங்கள் மற்றும் அது தொடர்பான விளக்க புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இந்த புகைப்பட கண்காட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றிருந்தது.

பேருந்து நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி

அரசின் திட்டங்களான பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம், திருமண நிதியுதவித் திட்டங்கள், மகப்பேறு நிதி உதவி திட்டங்கள், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், ஏரிகளில் குடி மராமத்து பணிகள் பற்றிய விளக்கப்படம், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தின் புகைப்படங்கள், டெங்கு விழிப்புணர்வு தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மாவட்ட செய்தி வெளியீட்டு துறையால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் உலக விண்வெளி வார விழா, கண்காட்சி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details