தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் நினைவாக வனம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம் - planting saplings memorial

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடும் பணியை, ஓசூர் சார் ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா நேற்று (ஜூன்.27) தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

By

Published : Jun 28, 2021, 8:25 AM IST

கிருஷ்ணகிரி:நமது நல்வாழ்க்கைக்கு சுற்றுப்புறமும் முக்கியக் காரணம். தூய்மையான காற்று, ஆரோக்கியத்தின் அரண்.

இதை வலியுறுத்தும் விதமாகவும், கரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் நினைவாகவும், மரம் நடும் பணியினை ஓசூர் சார் ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் பணி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

ஓசூர் சிப்காட் பேட்டரப்பள்ளியில் உள்ள ஏரியில் நடந்த இந்நிகழ்வில், 'கரிசக்காட்டுப் பூவே' எனும் அறக்கட்டளை அமைப்பினர் சுமார் 500 மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட கால வளர்ச்சி கொண்ட பனை, ஆலமரம், தென்னை, அத்தி மரம், பாதாம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

ஓசூர் சார் ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா

இதையும் படிங்க: 23 மாவட்டங்களில் துணி, நகை கடைகளை திறக்க அனுமதி

ABOUT THE AUTHOR

...view details