தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக மாநில விவசாய அணி சார்பில் 1,500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் - tamil news

கிருஷ்ணகிரி: ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் பாதித்த 1,500 குடும்பங்களுக்கு திமுக மாநில விவசாய அணி சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

DMK state agriculture
DMK state agriculture

By

Published : Apr 25, 2020, 10:45 AM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தனியார் அமைப்பினர் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவருகின்றனர்.

அந்தவகையில், திமுக மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன் ஏற்பாட்டில் கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,500 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் மற்றும் முகக்கவசம் அடங்கி தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்தார்.

1,500 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி திமுக சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் கலந்துகொண்டு நிவாரணப் தொகுப்புகளை கிராம மக்களுக்கு வழங்கினார். அதில் கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப், ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தசாமி, காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கரோனா பாதுகாப்பு - தமிழ்நாடு அரசு வெளியிட்ட விழிப்புணர்வு காணொலி

ABOUT THE AUTHOR

...view details