தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி வெற்றி! - Junior Hockey championship tournmnent winner erode team

கிருஷ்ணகிரி: மாநில அளவிலான ஜூனியர் பெண்கள் ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

hockey tournament
hockey tournament

By

Published : Dec 8, 2019, 3:06 PM IST

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த மூன்று நாட்களாக மாநில அளவிலான பெண்கள் ஜூனியர் ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்று வந்தது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களிலிருந்து அணிகள் மாநில போட்டிக்கு தகுதி அடைந்து, 26 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

நேற்று கால் இறுதிக்கு, எட்டு அணிகளும், அரை இறுதிக்கு நான்கு அணிகளும், தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டியில் ஈரோடு, திருவண்ணாமலை மாவட்ட அணிகள் மோதின. இறுதியில் ஈரோடு மாவட்ட அணி 1-0 எனும் கணக்கில் வெற்றி பெற்று மாநில சாம்பியன் பட்டத்தை வென்றது. 3ஆவது, 4ஆவது அணிகள் முறையே தஞ்சாவூர், திருச்சி மாவட்ட அணி வெற்றி பெற்றது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய பெண்கள் ஹாக்கி அணிக்கான சாம்பியன் பட்டத்திற்கு தமிழ்நாடு சார்பில், ஈரோடு அணி பங்கேற்க உள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசுகளையும் தமிழ்நாடு ஹாக்கி அணி சங்கத்தின் செயலாளர் ரேணுகா லட்சுமி வழங்கினார்.

மாநில அளவிலா பெண்கள் ஹாக்கி போட்டி

அதன்பின் ரேணுகா லட்சுமி பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹாக்கி வீரர்களின் விவரங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறை ஆக்கப்பட்டு 15 நாள்களில் அனைவருக்கும் இணையதள முறையில் அடையாள அட்டை வழங்கப்படும். விரைவாக இணையதளத்தை அணுகி இணையதளத்திலேயே அனைத்து விவரங்களையும் ஹாக்கி வீரர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

பிரீமியர் லீக் கால்பந்து: செல்சிக்கு ஷாக் கொடுத்த எவர்டன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details