கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த 8 மாதமே ஆன பெண் குட்டிய யானை, அகரம் கிராமத்துக்குள் நுழைந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குட்டி யானையை விரட்டினர். அப்போது அந்த யானை வழி தெரியாமல் அருகில் உள்ள வயல் வெளிகளிலும் விவசாய தோட்டங்களிலும் சுற்றித் திரிந்தது.
இது குறித்து தகவலறிந்த வந்த வனத்துறையினர், குட்டி யானையை தாயுடன் சேர்க்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த யானை, வனத்துறையினரையும் பொதுமக்களையும் தாக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஒபேபாளையம் கிராமத்தில் உள்ள கால்நடை தீவன புல் தோட்டத்துக்குள் நுழைந்தது.