கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு முனியம்மாள் என்கிற மூதாட்டியை மிதித்து கொன்றது. அதன்பின், இந்த காட்டு யானைகள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு புதன்கிழமை வந்தது.
பின் அணையில் இறங்கி ஆனந்த குளியல் போட்டன. இதுபற்றி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற வனத்துறையினர், யானைகளை பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.