தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவு தேடும் குட்டி யானை - வனப்பகுதியில் விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! - உணவு தேடும் குட்டி யானையை வனப்பகுதியில் விட ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி: உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித்திரியும் குட்டியானையை மீட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

elephant
elephant

By

Published : Jan 28, 2020, 2:10 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சானமாவு காப்புக்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைக் கூட்டம் தஞ்சமடைந்தது. அதிலிருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குச் சென்று அட்டகாசம் செய்து வந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த வனக் காவலர்கள் மயக்க ஊசி செலுத்தி, குட்டி யானையை மீட்டு, அதன் தாயுடன் சேர்த்தனர்.

இந்நிலையில், அதே குட்டி யானை மீண்டும் தாயிடமிருந்து பிரிந்து தனியாக வனப்பகுதிக்குள் வந்தது. பின்னர், உணவு தேடி இன்று அதிகாலை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியில் சுற்றித்திரிந்ததைக் கண்ட கிராம மக்கள், குட்டி யானையை விரட்ட பட்டாசுகள் வெடித்தனர்.

elephant

இது தொடர்பாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்த வனவிலங்கு ஆர்வலர்கள், குட்டி யானையை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்தை எதிர்த்த கையெழுத்து இயக்கம் மாபெரும் வெற்றிபெறும் - வைகோ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details