தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்கியின் உதவியால் பிடிபட்ட கொம்பன்! - கும்கி யானை

கிருஷ்ணகிரி: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் உள்ள பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் மயக்கநிலையில் கொம்பன் யானை பிடிப்பட்டது, கும்கி யானைகளின் உதவியுடன் வாகனத்தில் ஏற்றும் பணி நடைப்பெற்றது.

கொம்பன் யானை பிடிப்பட்டது

By

Published : Aug 25, 2019, 4:19 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் உள்ள பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் கொம்பன் யானை ஆபத்தான நிலையில் சுற்றித்திரிந்தது.

கொம்பன் யானை பிடிப்பட்டது.

யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் இரண்டு நாட்களாக போராடிய நிலையில் இன்று கொம்பனுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க நிலையில் உள்ள கொம்பன் வனத் துறையினரின் வாகனத்தில் ஏறுவதற்கு பலவீனமாக இருந்தது.

பின்பு மாரியப்பன், பரணி என்ற இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க நிலையில் உள்ள கொம்பனை வனத்துறை வாகனத்தில் ஏற்றும் பணி நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details