தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த யானை உயிரிழப்பு! - லாரி மோதிய விபத்தில் யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஜன.14ஆம் தேதியன்று தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற யானையின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் கயாமடைந்த யானை, சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜன.17) உயிரிழந்தது.

கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிகிச்சையிளிருந்த யானை உயிரிழப்பு
கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிகிச்சையிளிருந்த யானை உயிரிழப்பு

By

Published : Jan 17, 2021, 10:58 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜன.14ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பேரண்டப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற 40 வயதுடைய ஆண் யானையின் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆண் யானை பலத்த காயமடைந்து சாலையிலேயே விழுந்தது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் வனத் துறையினர், யானையை மீட்டு அய்யூர் பகுதியில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தனர். மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழு இரண்டு நாள்களாக சிகிச்சையளித்து வந்தது. சிகிச்சையின்போது எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் யானையின் இரண்டு கால்கள் அசைவற்ற நிலையிலேயே இருந்தது.

இதையடுத்து, யானையின் கால் பகுதிகளை ஸ்கேன் கருவி மூலம் சோதனை செய்ததில் யானையின் உடலின் உள்பகுதியில் பலத்த காயம் இருந்ததை கண்டறிந்தனர். அதற்காக சிகிச்சையளிக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருந்த நிலையில், இன்று (ஜன.17) யானை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

ABOUT THE AUTHOR

...view details