தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒசூர் அருகே கிராமப்பகுதியில் புகுந்த ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு! - Elderly man killed in wild elephant attack

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே உணவு தேடி கிராமப்பகுதியில் புகுந்த ஒற்றைக் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கி முதியவர் பலி
காட்டு யானை தாக்கி முதியவர் பலி

By

Published : Mar 10, 2021, 4:26 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒற்றைக் காட்டுயானை தொடர்ந்து முகாமிட்டுவருகிறது.

இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் இந்த யானை தொரப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திப்பாளம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு வருவதும், விளைநிலத்தில் உணவு எடுத்துக்கொண்டு விடியற்காலை மீண்டும் வனப்பகுதிக்குச் செல்வதும் வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு (மார்ச் 9) திருச்சிராப்பள்ளி கிராமப்பகுதியில் உணவு தேடிவந்த யானை விளைநிலத்திலேயே இருந்தநிலையில், இன்று (மார்ச் 10) விடியற்காலை விளைநிலப்பகுதிக்கு முதியவர் ராஜப்பா (எ) பாப்பையா (60) சென்றுள்ளார்.

காட்டு யானை தாக்கி முதியவர் பலி

அப்போது யானை தூக்கி வீசியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

ABOUT THE AUTHOR

...view details