கிருஷ்ணகிரி:ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமியை, அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா (60) என்கிற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட கிராமத்தினர் கிருஷ்ணப்பாவை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து முதியவரை கிராமத்தினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.