கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்புப் பெற கிருஷ்ணகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது அங்கிருந்த மின்வாரிய முதல்நிலை முகவர் (போர்மேன்) பழனிசாமி என்பவர் 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தனலட்சுமி கிருஷ்ணகிரியிலுள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.