கிருஷ்ணகிரிமாவட்டம் ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் கார்த்திக். இவர் கட்டுமான பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். அவரது மனைவி சந்தியா, இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சந்தியா, கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தாக கூறப்படுகிறது.