தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிராக்டர் மீது ஏரிய கர்நாடகா பேருந்து: ஓட்டுநர் உயிரிழப்பு - ஒசூர் அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம்

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது கர்நாடக அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் டிராக்டரைச் ஓட்டிச் சென்ற நபர் உயிரிழந்தார்.

accident
accident

By

Published : Jan 13, 2020, 9:55 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளியில் உள்ள மேம்பாலத்தில் ஒசூரை நோக்கிச் சென்ற டிராக்டர் மீது பின்னால் வந்த கர்நாட மாநில அரசுப் பேருந்து மோதியது. இதில் பேருந்து டிராக்டரின் மீது ஏரியதால் டிராக்டர் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் விபத்தில் காயமடைந்த நடராஜன் என்ற மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அரசுப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: கேரள எல்லையில் 4 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார்

முன்னாள் சென்ற டிராக்டர் எவ்வித வெளிச்சமும் இல்லாமல் சென்றதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த விபத்து காரணமாக பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details