கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பலரும் வேலையிழந்து ஒருவேளை உணவிற்கே சிரமப்பட்டுவருகின்றனர்.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கும்வண்ணம் திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்னும் திட்டத்தினை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இதையறிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள சிகரலப்பள்ளி கிராம மக்கள் ஒன்றிணைவோம் வா குழுவினைத் தொடர்புகொண்டுள்ளனர்.
நிவாரணப் பொருள்கள் வழங்கிய திமுக இதையடுத்து, உடனடியாகப் பர்கூர் திமுக ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சிகரலப்பள்ளி ஊராட்சி மசூதிவட்டம் கிராமத்திலுள்ள 50 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர், ஒன்றிய மாணவர் அணியினர், சிகரலப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர், பெருகோப்பனபள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் ஊரடங்கால் முடங்கிய குடும்பங்கள் - உதவிய திமுக!