தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊத்தங்கரையில் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலை நடத்தக்கோரி திமுகவினர் முற்றுகை - ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது.

DMK members blocking
DMK members blocking

By

Published : Jan 12, 2020, 1:55 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற இருந்த நிலையில், ஆளும் கட்சியினர் தற்போது வரை தேர்தல் நடத்தாமல் காலதாமதம் செய்வதாக திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கூறுகையில், ' தேர்தல் அலுவலர்களை கையில் வைத்துக்கொண்டு அதிமுகவினர் திட்டமிட்டு தேர்தலை நிறுத்தி வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். 13 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எங்கள் (திமுக) ஆதரவில் உள்ளனர். மேலும், ஒன்பது ஒன்றியக் குழு உறுப்பினர்களை மட்டுமே அதிமுக வைத்துக்கொண்டு சதி செய்து வருவதாக' குற்றஞ்சாட்டினார்.

DMK members blocking

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்து ஒன்றியக் குழு தலைவர் தேர்தலை நடத்தக்கோரி முற்றுகையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: 'தலைவரும் நாங்களே, துணைத் தலைவரும் நாங்களே' - நாமக்கல்லை தனதாக்கிய தங்கமணி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details