கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு இன்று (ஆகஸ்ட் 5) 100க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிராமைய்யா என்பவரின் மகனும் மேலவை பிரிதிநிதியுமான ராமாஞ்சி என்பவர் தலைமை ஏற்றார்.
அதிமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட திமுகவினர்! - கட்சி மாறிய திமுக உறுப்பினர்கள்
கிருஷ்ணகிரி: திமுகவிலிருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட திமுகவினர்!
இதில், திமுகவிலிருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதியதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதையும் படிங்க:'திமுகவில் யாரையும் வளர விடுவதில்லை' அதிமுகவில் இணைந்த முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்!