கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள சேவகானப்பள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக ராமசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். சேவகானப்பள்ளி அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் சீனிவாசன் (46) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் ராமசாமிக்கு போன் செய்து அங்குள்ள கல்குவாரி மற்றும் அந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகளில் மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சீனிவாசன் சிட்டா அடங்கள் சம்பந்தமாக, கிராம நிர்வாக அலுவலருக்கு போன் செய்துள்ளார், அப்போது கிராம நிர்வாக அலுவலர், தான் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் உள்ளதாகவும், நாளை அலுவலகத்திற்கு வாருங்கள் என்றும் கூறியுள்ளார்.