கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றிய அலுவலகத்தில் 60 நாள்களுக்கு ஒருமுறை நடக்கும் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 24) மூன்றாவது முறையாக நடைபெற்றது. அதிமுக சார்பில் ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் உள்ள நிலையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றியக் குழுவில் திமுகவின் ஏழு கவுன்சிலர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO) திமுக கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளில் முறையாக தகவலளிப்பதில்லை என்றும், தங்களை உரிய மரியாதையுடன் நடத்துவதில்லை எனவும் குற்றஞ்சாட்டி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். ஊராட்சிச் செயலாளர்களின் பணிகள் என்ன எனக் கேள்வி எழுப்பிய திமுக கவுன்சிலர்கள், அதற்குரிய பதில் கிடைக்காததால், திமுகவின் ஏழு கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.