கிருஷ்ணகிரி மாவட்டம் தாளப்பள்ளி ஊராட்சி பாஞ்சாலி பகுதியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 144 - தடை சட்டத்தால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளியோருக்கும், திருநங்கைகளுக்கும் நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றதலைவர் அம்சவள்ளி வெங்கடேசன், தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, ஊராட்சி செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோரர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய ரூ.650 மதிப்பிலான தொகுப்புகள் ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன. ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் தனது சொந்த செலவில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்பகுதி மக்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர்.
திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் திமுகவினர் இந்நிகழ்வின்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்வின்போது தாலுகா காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க:100 கிலோ நடைபயணம்... லிஃப்ட்: மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிய மனிதநேயர்கள்!