தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! - பர்கூர் பகுதி ஏரிகள் தூர்வாரும் பணி ஆய்வு

கிருஷ்ணகிரி: பர்கூர் பகுதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

By

Published : Aug 22, 2019, 6:09 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பர்கூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பில் 165 ஏரிகள் உள்ளது. தாய் திட்டத்தின் கீழ் 8 ஏரிகளும், தனியார் பங்களிப்புடன் 4 ஏரிகளும் தூர் வாரப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் 12 ஏரிகளில் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தொடர்ந்து பேசிய அவர், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 33 குளம் குட்டைகள், தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 33 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளபட்டு வருகிறது. வருவாய்த் துறை, நிலஅளவை துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவை சார்பாக ஏரிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details