கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லையான ஓசூர் ஜுஜுவடி சோதனைச் சாவடியில் காவல்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை என மூன்று துறையினரும் இரவு பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு (மே.6) ஓசூர் - பெங்களூர் சாலையில் பணியில் ஈட்டுப்பட்டிருந்த போக்குவரத்து காவலர் சேட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, பெங்களூர் நோக்கி வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கண்டெய்னர் லாரி ஒன்று, அங்கிருந்த தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சேட்டு மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டி.எஸ்.பி சங்கு, இறந்த காவலரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.