கொரட்டகிரி கிராமத்துக்குள் கல்குவாரி லாரிகள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதித்த நிலையில், அந்த ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கிருஷ்ணகிரி:ஒசூர் அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் உள்ள 7 கல்குவாரி, கிரஷர்களின் கனரக லாரிகள் ஊருக்குள் செல்ல கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். இந்த நிலையில் கல்குவாரி சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து கொரட்டகிரி கிராமத்துக்குள் லாரிகள் செல்லவும், குவாரிகள் செயல்படவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த வாரம் கல்குவாரி லாரிகள் ஊருக்குள் வந்தது. ஆனால் அப்போது லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே அனுமதி அளித்துள்ள நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி கொரட்டகிரி கிராமம் முன்பு, கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் என 3,000க்கும் அதிகமானோர் பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டம், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி கொரட்டகிரி கிராமத்துக்குள் கனரக லாரிகள் செல்லும் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரட்டகிரி கிராம சாலை முன்பு 3 கிமீ தூரத்துக்கு, சாலையோரமாக இருபுறங்களிலும் லாரிகள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Cuddalore Accident: அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!