கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் துறையினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இடையேயான இரண்டாமாண்டு நல்லுறவு கிரிக்கெட் போட்டி தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கு தலைமையிலான அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 149 ரன்களைக் குவித்தது. பின்பு விளையாடிய பத்திரிகையாளர்கள் அணி 150 ரன்கள் இலக்கில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.