தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 5:15 PM IST

ETV Bharat / state

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடிய ஒகேனக்கல்

தருமபுரி: கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

hoganakkal
hoganakkal

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலாத் தலங்கள், கோயில் திருவிழாக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தடை விதித்து உத்தரவிட்டார். அரசின் இந்த உத்தரவின் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது.

வெறிச்சோடி காணப்படும் ஒகேனக்கல்

கர்நாடக எல்லையிலிருந்து வரும் வாகனங்களும், சுற்றுலாப் பயணிகளும், ஒகேனக்கல்லுக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதையும் படிங்க:கோவிட்-19 தொற்று அபாயம்: இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டம் முடிவை எட்டியது!

ABOUT THE AUTHOR

...view details