கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் (ஜூன் 6) மட்டும் ஒரு நாளில் மட்டும் ஆறு பேருக்கு நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டள்ளது.
இந்நிலையில் பீகாரிலிருந்து அத்திவீரம்பட்டி கிராமத்திற்கு வந்த ஒருவருக்கும், கேரளாவில் இருந்து வளத்தானூர் கிராமத்திற்கு வந்த ஒருவருக்கும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கொம்மம்பட்டு கிராமத்திற்கு வந்த ஒருவருக்கும், சென்னையில் இருந்து காரப்பட்டு கிராமத்திற்கு வந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கும், அவரது பேத்தி எட்டு வயது சிறுமிக்கும், ரெட்டிவலசை கிராமத்தை சார்ந்த ஏழு வயது சிறுவனுக்கு கரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.