இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கரோனா வைரஸ் பரவலை ஊரடங்கு உத்தரவால் முழுமையாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளும், கோயம்பேடு சந்தையும் திறந்ததன் விளைவாக தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் வரும் வருமானம் தேவையற்ற ஒன்று.
டாஸ்மாக்கும், கோயம்பேடு சந்தையும் திறக்கப்பட்டதன் விளைவுதான் கரோனா உயர்வு - corona latest update
கிருஷ்ணகிரி: டாஸ்மாக் மதுக்கடைகளும், கோயம்பேடு சந்தையும் திறக்கப்பட்டதன் விளைவுதான் கரோனா உயர்வுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.
chellakumar MP
தமிழ்நாட்டில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப ஆரம்பத்திலேயே வழி செய்திருக்க வேண்டும். அவ்வாறு அரசு செய்யாத காரணத்தால் அவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒரே நாளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை