நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபள்ளி ஊராட்சி ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி பேசி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் கிராம எல்லையை மூடி உள்ளனர்.
ஏணிமுச்சந்திரம் கிராமத்தில் கரோனா நடவடிக்கை மேலும் கிராம எல்லைக்குள் வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என்று துண்டுப் பிரசுரம் அடித்து ஒட்டியுள்ளனர். வேப்பிலையால் கிருமிநாசினி தயாரித்து கிராமங்களில் உள்ள வீடுகளில் தெளித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு நோய் தொற்றாமல் இருக்க அறிவுறுத்தி வந்தாலும் இந்த கிராம மக்களின் செயல் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'காதலியைக் காண முகாமிலிருந்து தப்பியோடினேன்’