கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர், செயலாளர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.உதவி திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஷ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு நிதி மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தனிநபர் சொத்து உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.