தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் கரோனா ரத்த மாதிரி பரிசோதனை மையம்: மாவட்ட ஆட்சியர் - கரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி: இரண்டு இடங்களில் கரோனா ரத்த மாதிரிகள் பரிசோதனை மையம் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

ஆய்வு
ஆய்வு

By

Published : Apr 17, 2020, 12:15 PM IST

ஓசூரில் பொது மற்றும் தனியார் கூட்டுறவில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஓசூர் தொழிற்சங்க கூட்டமைப்பினரின் ஒன்றரை கோடி ரூபாய் நிதியில் ஓசூர் பொது மற்றும் தனியார் கூட்டுறவில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவமனையில் வென்ட்டிலேட்டர், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உபகரணங்கள் பெறப்பட்டு 50 படுக்கைகளுடன் கூடிய கரோனா நோய்த் தொற்று சிகிச்சை சிறப்பு மருத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மற்றும் ஓசூர் வெக்டார் கன்ட்ரோல் இன்ஸ்டிட்யூட் ஆகிய இரண்டு இடங்களில் கரோனா ரத்த மாதிரிகள் பரிசோதனை மையம் இரண்டு நாள்களில் செயல்பட இருக்கிறது. இனி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்தேகிக்கக்கூடிய நபர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்துக்கொள்ள முடியும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் உள்ளிட்ட எந்தப் பகுதிகளிலும் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 410 பேரின் ரத்த மாதிரிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுக்குட்படுத்தியதில் 265 பேருக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள 145 பேரின் ரத்த மாதிரி முடிவுகள் விரைவில் தெரியவரும்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசின் கட்டுப்பாட்டில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்போரின் எண்ணிக்கை 3,035 பேர், 28 நாள்கள் தனிமைப்படுத்தப்படுத்துதல் முடிவுற்றோரின் எண்ணிக்கை 607 பேர். முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை கரோனா பாதிப்பற்ற மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details