தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிருஷ்ணகிரியில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்! - கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 11 ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆட்சியர் சு.பிரபாகர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரியில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரியில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

By

Published : May 16, 2020, 3:20 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கொய்மலர்கள் உள்ளிட்டவை அதிகமாக விளைவிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை பொருள்கள் உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. இங்கு விளைவிக்கும் பொருள்களை வேளாண்மைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு கிடைக்க ஏதுவாக அரசின் மூலமாக மொத்த விற்பனை வணிக வளாகம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் 2020-2021 நிதியாண்டில் 11 ஏரிகள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 11 ஏரிகள், 65 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், இன்று பில்லனகுப்பம் ஊராட்சியில் பண்டப்பள்ளி குட்டை ஏரியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர்நேரில் சென்று ஆய்வு செய்து கரைகளில் அதிக மண் அமைத்து பலப்படுத்துவதோடு மழை காலத்திற்கு முன்பாக பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஓரிரு நாளில் குடிமராமத்து பணி தொடங்கும் - அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details