கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் டெங்கு காய்ச்சல் கொசுகளை அழித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபகர் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், அவர் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் நகராட்சி, சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் இப்பணிகள் தொடங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல், கொசு புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை நகராட்சி சார்பில் 56 பணியாளர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். இதில், டெங்கு தடுப்பு மருந்து, முதிர் கொசுக்களை ஒழிக்கும் பைரித்திரம் புகை மருந்து, புகை மருந்து இயந்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.